உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம்! ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை


உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம்! ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
x

உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என புதினிடம் அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டன்,

ரஷிய அதிபர் புதின் உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதினை எச்சரித்தார்.

உக்ரைனின் இராணுவம் இந்த வாரம் நாட்டின் வடகிழக்கில் இருந்த ரஷியப் படைகளை மின்னல் வேகத்தில் விரட்டியடித்தது. இந்த பின்வாங்கும் நடவடிக்கை ரஷியாவிற்கு பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து புதின் பேசுகையில், "ரஷியா இன்னும் வலுவாக பதிலளிக்கும்" என்று புதின் எச்சரித்துள்ளார்.இதன் காரணமாக, ரஷியா ஒரு கட்டத்தில் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான வழிகளைப் பயன்படுத்தக்கூடும் என்ற கவலை உலக அரங்கில் எழும்பியுள்ளது.

இந்த நிலையில், அத்தகைய ஆயுதங்களை ரஷியா பயன்படுத்துவதைப் பற்றி புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்ன சொல்வார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பைடன் கூறுகையில்:-

"வேண்டாம், இது இரண்டாம். உலகப் போருக்குப் பிறகு போரின் முகத்தை மாற்றும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து, என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்" என்றார்.

இடன்மூலம், உக்ரைனில் தந்திரோபாய அணு அல்லது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், உக்ரைனில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தும் என்ற மேற்கத்திய நாடுகளின் கருத்துக்களை ரஷிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.


Next Story