இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்...!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
AFP
AFP
Published on

லண்டன்

நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது.

தற்போது தொடர் ராஜினாமாவாக கடந்த 48 மணி நேரத்தில் அமைஅச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார். அக்டோபரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தேர்ந்து எடுக்கபடுவார் எனதகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com