"லேபர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு".. "நீடிப்பாரா ரிஷி சுனக்..?" - வெளியான ஆய்வு முடிவு...


லேபர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு.. நீடிப்பாரா ரிஷி சுனக்..? - வெளியான ஆய்வு முடிவு...
x

கோப்புப்படம் 

இங்கிலாந்தில் அடுத்த தேர்தல் நடைபெறும் போது லேபர் கட்சியே ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என வாக்கெடுப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் தொடர்ந்து நிலவி வந்த அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக அடுத்த பொதுத்தேர்தல் ஒன்று நடைபெற்றால், அதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என மக்களிடன் தொடர்ந்து கருத்துக்களை கேட்டு, அதன் முடிவுகளை வெளியிட்டு வந்தது யூ கவ் என்ற வாக்கெடுப்பு நிறுவனம்.

அந்த வாக்கெடுப்பு நிறுவனத்தின் முடிவுகளின் படி, கான்சர்வேட்டிவ் கட்சியினை சேர்ந்த லிஸ் டிரஸ் பிரதமராக இருந்தபோது, அக்கட்சி அதள பாதாளத்தில் இருந்ததாகவும், கேபர் கட்சி அடுத்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாச்த்தில் வெற்றிபெறும் என்றும் முடிவுகளை வெளியிட்டு இருந்தது.

தற்போது லிஸ் டிரஸை தொடர்ந்து ரிஷி சுனக் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த முடிவுகளில் சிறிய மாற்றங்கள் மட்டுமே கானப்படுவதாகவும், தொடர்ந்து லேபர் கட்சியே அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் வாக்கெடுப்பு முடிவுகளின் படி, ரிஷி சுனக்கை காட்டிலும், லேபர் கட்சியின் தலைவரான சர் கேர் ஸ்டாமரே பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று பிரிட்டன் மக்கள் விரும்புவதாக தெரிவித்திருக்கின்றது.

ஆனால் இந்த நிறுவனமானது பிரிட்டனை சேர்ந்த அனைத்து மக்களிடமும் கருத்துக்களை கேட்கவில்லை என்ற காரணத்தினால், அதன் முடிவுகள் குறித்த சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

இங்கிலாந்தில் நிலவிவரும் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் தொடர்ந்து மாறுதல்களை சந்திக்கும் போது, இந்த நிறுவனத்தின் வாக்கெடுப்பு முடிவுகளிலும் மாறுதல்கள் ஏற்படும் என்று நம்பப்படுகின்றது.


Next Story