பிலிப்பைன்சில் தொடர்ந்து 2வது முறையாக நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
பிலிப்பைன்சில் தொடர்ந்து 2வது முறையாக நிலநடுக்கம்
Published on

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் தொடர்ந்து 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9.50 மணியளவில் ஏற்பட்ட இந்த 2வது நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்சில் மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா கிராமத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. முன்னதாக இன்று அதிகாலை 3.52 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com