மனைவி, அத்தை, மைத்துனன் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை


மனைவி, அத்தை, மைத்துனன் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை
x

மனைவியின் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு இருந்த அனைவரையும் சுட்டுக்கொன்ற கணவன் தற்கொலை செய்துகொண்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேரிலேட் மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்டிரு சேல்ஸ் (வயது 28). இவரது மனைவி சாரா மென் (வயது 21). இந்த தம்பதிக்கு கெலின், வெஸ்லி என 2 குழந்தைகள் உள்ளன. சாரா மென்னின் தாயார் சொம்லி மென் (வயது 48), சகோதரர் கை மென் (வயது 18).

இதனிடையே, ஆண்டிருவுக்கும் அவரது மனைவி சாராவுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனால், சாரா தனது தாயாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், சாராவின் வீட்டிற்கு நேற்று ஆண்டிரு வந்தார். அப்போது, வீட்டில் சாரா அவரது தாயார் சொம்லி மென், சகோதரர் கை மென், குடும்ப நண்பர் ஜோவென் வாட்சன் (வயது 23) ஆகிய 4 பேர் இருந்தனர்.

வீட்டிற்கு வந்த ஆண்டிரு சாராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆண்டிரு தான் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியை கொண்டு வீட்டில் இருந்த அனைவரும் மீது தாக்குதல் நடத்தினார். ஆண்டிரு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சாரா அவரது தாயார் சொம்லி மென், சகோதரர் கை மென், குடும்ப நண்பர் ஜோவென் வாட்சன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னரும் ஆத்திரம் அடங்காத ஆண்டிரு உயிரிழந்த அனைவரையும் கத்தியால் குத்தியுள்ளார். மனைவி, மாமியார், மைத்துனன் உள்பட 4 பேரை கொடூரமாக கொலை செய்த ஆண்டிரு பின்னர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலை விவகாரமாக வெளியே சென்றிருந்த சொம்லி மெனின் கணவர் டரின் மென் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஆண்டிரு சேல்ஸ் இவரது மனைவி சாரா மெனின் 2 குழந்தைகளும் உயிருடன் பத்திரமாக போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story