அவள் என் காதலி...! 800 வருட பழமையான மம்மியோடு சிக்கிய வாலிபர்

உணவு டெலிவரி பையில் 800 ஆண்டு பழமையான மம்மி காதலி என்று தூக்கி கொண்டு அலைந்த வாலிபரிடம் மம்மி பறிமுதல்
அவள் என் காதலி...! 800 வருட பழமையான மம்மியோடு சிக்கிய வாலிபர்
Published on

பெரு

பெரு நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ (26). தனது உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார்.இவர் தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவில் மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார்

அங்கு சீசர வைத்திருந்த உணவு டெலிவரி பையை திறந்து பார்க்கும் போது, அதில் மம்மி உடல் இருந்ததைக் போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது தொடரபாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மம்மியை அவரது அப்பா 30 வருடங்களுக்கு முன்னால் வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

சீசர் பெர்மேஜோ அந்த மம்மியை "தனது ஆன்மீக காதலி" என்றும் கூறியுள்ளார். மேலும் நான் அவளோடு உரையாடுவேன் என்றவர்.வீட்டில், அது என் அறையில் இருக்கும், அதனுடன் தான் நான் தூங்குவேன். எனது நண்பர்களுக்குக் காட்டுவதற்காக மம்மியை எடுத்துச் சென்றதாக கூறி உள்ளார்.

இதனை அடுத்து அவரிடமிருந்த மம்மியை செய்த போலீசார் அதனை தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மம்மியை ஆராய்ச்சி செய்த கலாச்சார அமைப்பு வெளியிட்ட தகவலில்

மம்மி இறந்த ஆண் நபரின் உடலாகும். 600 முதல் 800 ஆண்டுகள் பழமையானது என மஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய மம்மி. இந்த மம்மி குறைந்தது 45 வயதுடைய மனிதனுடையதாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.

மம்மி பண்டைய கால பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக பெரு அரசு கூறியுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com