பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!


பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!
x

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டாரஸ் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டாரஸ் மாலின் மூன்றாவது மாடியில் இன்று ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது, மேலும் கட்டிடத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் உள்பட மற்ற தளங்களில் பரவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

மீட்புக் குழுக்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து முதல் தளம் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ள மேல் பகுதிகளுக்கு தீ வேகமாக பரவி வருவதால், தீயின் தீவிரம் அதிகரித்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




Next Story