65 வயது மச்சாக்கார மேயர்...! 16 குழந்தைகள் இருந்த போதும் 16 வயது அழகியை 7வதாக திருமணம் செய்தார்


65 வயது மச்சாக்கார மேயர்...! 16 குழந்தைகள் இருந்த போதும் 16 வயது அழகியை 7வதாக திருமணம் செய்தார்
x
தினத்தந்தி 28 April 2023 11:20 AM IST (Updated: 28 April 2023 11:30 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் அரவுகாரியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்து இருந்தார்.

பிரேசிலின் பரானா மாகாணத்தின் அரவுகாரியா நகராட்சியின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி (65) கடந்த மாதம் 16 வயதுடைய காவான் ரோட் காமர்கோ என்ற சிறுமியை பெண் திருமணம் செய்து கொண்டார்.

மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனிக்கு இது 7வது திருமணமாகும், இதற்கு முன்னதாக 6 திருமணம் நடைபெற்று உள்ளது. அவருக்கு 1980ல் முதல் திருமணம் நடைபெற்றது.

6 திருமணங்களில் மேயர் ஹிசாம் ஹூசைனுக்கு மொத்தம் 16 குழந்தைகள் உள்ளனர்.

மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி திருமணம் செய்து கொண்டுள்ள காவான் ரோட் காமர்கோ பள்ளி மாணவி ஆவார். கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் அரவுகாரியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்து இருந்தார்.

திருமணம் நடைபெற்ற பிறகு ஹிசாம் அவரது மேயர் பதவியில் இருந்து விலகி உள்ளார், இதற்கிடையில் திருமணமான ஒருநாள் கழித்து சிறுமியின் தாய் மரிலீன் ரோட் அரவுகாரியா நகராட்சியின் கலாச்சார செயலாளராக பதவி உயர்வு பெர்று உள்ளார்.

மேயர் ஹிசாம் ஹூசைன் கடந்த 2000ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, விசாரணை செய்யப்பட்டார். பின் கைது செய்யப்பட்ட அவர், கடத்தல் கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் என்று அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

1 More update

Next Story