ஹமாஸ்-க்கு எதிரான போர் குறித்த முக்கிய தகவலை கூறிய இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் காசா இடையிலான போர் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ்-க்கு எதிரான போர் குறித்த முக்கிய தகவலை கூறிய இஸ்ரேல் பிரதமர்
Published on

டெல் அவிவ்,

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 23வது நாளாக நீடித்து வருகிறது. இந்தநிலையில்,விமானம் மற்றும் கடல் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழித்தாக்குதலில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசுகையில், 

ஹமாஸ் படைக்கு எதிரான போர் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இது மிகவும் சவாலானதாகவும் நீண்டதாகவும் இருக்கும். தரைப்படை தாக்குதலை 2-வது கட்ட முற்றுகையாக பார்க்க வேண்டும். தரைவழியாக நுழைந்ததன் மூலம் தாக்குதல் மிகத்தீவிரமாக இருக்கும். 229 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருக்கிறது"  என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com