இலங்கைக்கு நிதி உதவி வழங்கப்போவது இல்லை: உலக வங்கி திட்டவட்டம்


இலங்கைக்கு  நிதி உதவி வழங்கப்போவது இல்லை: உலக வங்கி திட்டவட்டம்
x

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அத்தியாவசிய பொருட்கள் கூட போதிய அளவு இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

ஜெனீவா,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வரலாறு காணாத நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இக்கட்டான சூழலில் இலங்கை உள்ள நிலையில், இலங்கைக்கு நிதி உதவி அளிக்கவும் உலக வங்கி மறுத்துளது. இது குறித்து உலக வங்கி கூறுகையில், நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டத்தை வகுக்கும் வரையில் இலங்கைக்கு உதவப்போவதில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.

அதேவேளையில், இலங்கையிலுள்ள ஏழ்மையான மக்களுக்கான உதவிகளை வழங்கி வருவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.


Next Story