ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் வடகொரியா: ஜப்பான் கடற்பகுதியில் இன்று 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை!


ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் வடகொரியா: ஜப்பான் கடற்பகுதியில் இன்று 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை!
x

வடகொரியா இந்த ஒரே வாரத்தில் 4வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

சியோல்,

வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து, பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.

வடகொரியா சனிக்கிழமை அன்று, இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது. என்று ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.அந்த இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே விழுந்ததாகத் தெரிகிறது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருகிறார் என்று தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளும் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மாதம் வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story