ஒருபுறம் ஏவுகணை தாக்குதல்... மறுபுறம் இருளில் மூழ்கிய நகரம் - மெழுகுவர்த்தி ஒளியில் உக்ரைன் மக்கள்


ஒருபுறம் ஏவுகணை தாக்குதல்... மறுபுறம் இருளில் மூழ்கிய நகரம் - மெழுகுவர்த்தி ஒளியில் உக்ரைன் மக்கள்
x

மின் தடையால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நகர உணவகங்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கி வருகின்றன.

கீவ்,

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷிய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதன் காரணமாக உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு மின் தடை மிகப்பெரிய மன உளைச்சலைத் தந்துள்ளது.

இதையடுத்து, உக்ரைனியர்களின் மனங்களை மகிழ்விக்கும் விதமாகவும், அதே சமயம் மின் தடையை சமாளிக்கும் வகையிலும் உக்ரைனிய உணவகங்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரம்மியமாக இயங்கி வருகின்றன


Next Story