தெற்கு, கிழக்கு உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய 3 பகுதிகளை மீட்ட உக்ரைன் படைகளுக்கு நன்றி! -அதிபர் ஜெலென்ஸ்கி


தெற்கு, கிழக்கு உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய 3 பகுதிகளை மீட்ட உக்ரைன் படைகளுக்கு நன்றி! -அதிபர் ஜெலென்ஸ்கி
x
தினத்தந்தி 5 Sep 2022 2:49 AM GMT (Updated: 2022-09-05T10:04:25+05:30)

உக்ரைனில் ரஷியா கைப்பற்றியுள்ள பகுதிகளை மீட்க, உக்ரைன் எதிர் தாக்குதல் தொடங்கியது.

கீவ்,

உக்ரைனில் ரஷியா கைப்பற்றியுள்ள பகுதிகளை மீட்க, கடந்த வாரம் உக்ரைனின் எதிர்த்தாக்குதல் தொடங்கியது. அதில் தங்கள் நாட்டு படைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று தெரிவித்தார்.

நேற்றிரவு வீடியோ மூலம் ஆற்றிய உரையில் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும், கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் கைப்பற்றியதற்காக தனது படைகளுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு குடியேற்றத்தை ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்ததற்காக தனது படைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.ஆனால், அவை எந்தெந்த இடங்கள் அல்லது எங்கே என்பதை அவர் துல்லியமாக கூறவில்லை.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் அவரது இராணுவத் தளபதிகள் மற்றும் உளவுத்துறைத் தலைவரிடமிருந்து நல்ல அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

இதை உறுதிபடுத்தும் விதமாக அதிபர் மாளிகை தலைமை அதிகாரி ஒருவர், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் உக்ரேனிய கொடியை உயர்த்தும் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

தற்போதைய போரின் ஆரம்ப கட்டத்தில் ரஷியப் படைகளால் கைப்பற்றப்பட்ட கெர்சன் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உக்ரைன் ராணுவ வீரர்கள் கொடியேற்றும் படங்கள் வெளியாகின. ரஷிய சார்பு பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லிசிசான்ஸ்க் பகுதியிலும் உக்ரைன் ராணுவ வீரர்கள் முன்னேறியுள்ளனர்.


Next Story