காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து: "ஒருதலை பட்சமான தீர்ப்பு" - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சாடல்


காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஒருதலை பட்சமான தீர்ப்பு - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சாடல்
x

கோப்புப்படம்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

இஸ்லாமாபாத்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு மத்திய பா.ஜனதா அரசால் ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஜலில் அப்பாஸ் ஜிலானி, தனது எக்ஸ் வலைத்தள பதிவில், "சர்வதேச சட்டம், இந்தியாவின் ஒருதலைப்பட்சமான சட்டவிரோதமான 2019, ஆகஸ்டு 5 நடவடிக்கைகளை அங்கீகரிக்காது. இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எந்த சட்டப்பூர்வ மதிப்பும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீரிகள் யாராலும் பறிக்க முடியாத சுய நிர்ணய உரிமையை பெற்றுள்ளனர்" என்று கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், 'இது ஒருதலை பட்சமான தீர்ப்பு' என்று விமர்சித்ததுடன், காஷ்மீரிகளின் உரிமைக்காக குரல் எழுப்புவோம் என்றும் கூறி உள்ளார்.


Next Story