பிலிப்பைன்ஸ்; நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 197 பேர் உயிரிழப்பு


Philippines 197 died due to Dengue
x

Image Courtesy : AFP

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழைக்காலத்தின் தொடக்கத்தில் வானிலையில் ஏற்படும் மாறுபாடுகள், வெள்ளப்பெருக்கு மற்றும் அசுத்தமான தண்ணீர் தேக்கம் போன்ற காரணங்களால் டெங்கு உள்ளிட்ட நீரில் பரவும் தொற்று நோய்கள் வேகமாக பரவுகின்றன.

அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 1-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் சுமார் 70,500 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 197 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கடந்த மே மாத இறுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் மழைக்காலம் தொடங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

1 More update

Next Story