சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
Published on

சாண்டியாகோ,

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை 7.01 மணியளவில் சாண்டியாகோ நகரின் வடக்கே 524 கிலோமீட்டர் தூரத்தில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com