லாட்வியாவில் 4 பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்து!


லாட்வியாவில் 4 பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்து!
x

ஜெர்மனியை நோக்கி சென்ற தனியார் ஜெட் விமானம் ஒன்று லாட்வியாவில் விபத்துக்குள்ளானது.

பெர்லின்,

ஜெர்மனியை நோக்கி நான்கு பேருடன் சென்ற தனியார் ஜெட் விமானம் ஒன்று லாட்வியாவில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் ஸ்பெயின் மற்றும் கொலோன் இடையே பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திசைதிரும்பி சென்றது.

அந்த விமானம் திசைதிருப்பப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உடனடியாக விமானியை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்புகொண்டும் பயனில்லை.

கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் பால்டிக் கடலில் சுவீடன் வான்வெளியில் பறந்து, இரவு 8:00 மணிக்கு வென்ட்ஸ்பில்ஸ் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்தது.

எரிபொருள் தீர்ந்தபோது அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது. லாத்வியா, லிதுவேனியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் பணியாற்றி இறந்தவர்கள் உடல்களை தேடி வருகின்றன.

1 More update

Next Story