இலங்கையில் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு - நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட புத்த துறவிகள்


இலங்கையில் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு - நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட புத்த துறவிகள்
x

இலங்கயில் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற அலுவலகத்தை புத்த துறவிகள் முற்றுகையிட்டனர்.

கொழும்பு,

இலங்கையில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அந்நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

1987ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே 13ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை இந்த சட்டத்திருத்தம் அளிக்கிறது. இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கயில் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் நாடாளுமன்ற அலுவலகத்தை புத்த துறவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது சட்ட திருத்தத்தின் நகலை தீவைத்து எரித்த அவர்கள், 13-வது சட்ட திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தக் கூடாது என முழக்கமிட்டனர்.

அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்திய போது, இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



Next Story