இலங்கையில் அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் போராட்டம்


இலங்கையில் அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் போராட்டம்
x

யாழ்ப்பாணத்திற்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கொழும்பு,

யாழ்ப்பாணத்திற்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர்.

பொங்கலையொட்டி யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர். ஆனால், கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் செய்வதறியாது நின்றனர்.

1 More update

Next Story