வெஸ்ட்மின்ஸ்டர் அபே-க்கு கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத் உடல்: 2000-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் அஞ்சலி


தினத்தந்தி 19 Sept 2022 4:00 PM IST (Updated: 19 Sept 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட்மின்ஸ்டர் அபே-க்கு கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத் உடலுக்கு 2000-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

லண்டன்,

இங்கிலாந்து வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில், தன்னுடைய 96-வது வயதில் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். ராணியின் இறுதி சடங்கு, லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே(மடாலயத்தில்) நடக்கிறது. அதன்பின், மடாலயத்தில் அங்குள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், ராணியின் கணவர் இளவரசர் பிலிப் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே ராணி எலிசபெத்தின் உடல் புதைக்கப்படும்.

இந்தநிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் அபே-க்கு கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத் உடலுக்கு 2000-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு உலக தலைவர்கள் இறுதிப்பிரியாவிடை தரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மதக் கூட்டம் நடைபெறுகிறது.

இதன் பிறகு இறுதிப் பயணம் வின்ட்சர் கோட்டையை நோக்கிச் செல்லும். அங்கு ராணியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதிப் பிரியாவிடை அளிப்பார்கள். பின்னர் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்

1 More update

Next Story