இங்கிலாந்து உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து சுவெல்லா பிரேவர்மென் நீக்கம்- ரிஷி சுனக் அதிரடி


இங்கிலாந்து உள்துறை மந்திரி  பொறுப்பில் இருந்து சுவெல்லா பிரேவர்மென் நீக்கம்- ரிஷி சுனக் அதிரடி
x
தினத்தந்தி 13 Nov 2023 3:36 PM IST (Updated: 13 Nov 2023 3:48 PM IST)
t-max-icont-min-icon

பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மென் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த வாரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை போலீசார் கையாண்ட விதம் குறித்து உள்துறை மந்திரி சுவெல்லா பிரேவர்மென் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இதனால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில், இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து சுவெல்லா பிரேவர்மெனை பதவி நீக்கம் செய்து ரிஷி சுனக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மென், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.சுவெல்லா பிரேவர்மென் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் இங்கிலாந்து உள்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

1 More update

Next Story