உக்ரைனில் பொதுமக்களின் வாகனங்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
Image Credit:Reuters
Image Credit:Reuters
Published on

கீவ்,

உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நேற்று நடத்திய தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டனர், 28 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 85க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய கவர்னர் ஸ்டாருக் இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளார். "ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷியப் படைகள் பொதுமக்கள் வாகனங்கள் மீது ராக்கெட் தாக்குதலைத் தொடுத்தன" என்று அவர் கூறினார்.

இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும், சாலையில் உடல்கள் கிடப்பதையும் படங்களில் காண முடிகிறது. எனினும், இதுதொடர்பாக ரஷியா தரப்பில் உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com