40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - உக்ரைன் தகவல்


40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - உக்ரைன் தகவல்
x

Image Courtacy: AFP

40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷியா, இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது.

பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது. ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டித்தன. இந்த நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது இன்று ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உக்ரைன் விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங்கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், மைகோலாயின் தெற்கு நகரம் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story