கரீபியன் கடல் பகுதியில் தங்கத்துடன் மூழ்கிக் கிடக்கும் கப்பல்கள்


கரீபியன் கடல் பகுதியில் தங்கத்துடன் மூழ்கிக் கிடக்கும் கப்பல்கள்
x

சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது.

மேட்ரிட்,

கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில், கடந்த 1708 ஆம் ஆண்டு 'சான்ஜோஸ்' என்ற கப்பல் சுமார் 600 பேருடன் கடலில் மூழ்கியது. அதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் இருந்தது. உலகிலேயே அதிக தங்கதுடன கடலில் மூழ்கிய கப்பலாக இது கருதப்படுகிறது.

இந்த கப்பலை தேடும் பணி பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் 2015-ம் ஆண்டு கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை தற்போது ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது.

அதில் சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கி கிடக்கின்றன. நீலம், பச்சை நிறங்களில் கடலின் அடியில் தங்க நாணயங்கள், மண்பாண்டங்கள், பீங்கான் கோப்பைகள் சிதறி கிடக்கின்றன. மேலும் ஒரு பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில் கிடக்கிறது. இது தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Next Story