பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்... "மீளுமா இலங்கை..?"


பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்... மீளுமா இலங்கை..?
x

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ,

ஜப்பானின் டோக்கியோ நகரில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து பேசினார். அதிபர் அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று கட்டப்பட்டிருப்பது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.

பின்னர் சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் அதிபர் குறிப்பிட்டார். இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங், இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இலங்கைக்கு வருமாறு, சிங்கப்பூர் பிரதமருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

1 More update

Next Story