சிங்கப்பூரில் பூச்சிகளை சாப்பிட அனுமதி? - அரசு பரிசீலனை


சிங்கப்பூரில் பூச்சிகளை சாப்பிட அனுமதி? - அரசு பரிசீலனை
x

கோப்புப்படம்

சிங்கப்பூரில் பூச்சிகளை சாப்பிட அனுமதி அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூர் சிட்டி,

சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன துறையிடம் அரசு கருத்துகளை கோரியுள்ளது.

இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், தேனீக்கள் போன்ற பூச்சிகளை சிங்கப்பூர் மக்கள் உணவாக உட்கொள்ள முடியும். இந்த பூச்சிகளை நேரடியாகவோ அல்லது எண்ணையில் பொரித்த திண்பண்டங்களாகவோ சாப்பிட முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூச்சிகளை உணவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை பெற்றுள்ளதாக சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை கூறியுள்ளது.


Next Story