தென் ஆப்பிரிக்க அதிபர் பதவிக்கு நெருக்கடி


தென் ஆப்பிரிக்க அதிபர் பதவிக்கு நெருக்கடி
x

தனது பண்ணை வீட்டில் ரூ.32 கோடி திருட்டு போனதை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா மறைத்த விவகாரத்தில், அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அதிபர் வீட்டில் திருட்டு

தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவி வகிப்பவர், சிரில் ரமபோசா (வயது 70). இவர் மீது 'பார்ம்கேட்' என்னும் பண்ணை ஊழல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதாவது, இவர் தனது பண்ணை வீட்டில் இருந்து 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.32 கோடி) திருட்டு போனதை, தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி மறைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பதவிக்கு நெருக்கடி

இந்த ஊழல் பற்றி ஒரு சுயாதீன குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கை வெளியே கசிந்து விட்டது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றம் ஆய்வு செய்து, அடுத்த வாரம் அதிபர் சிரில் ரமபோசா மீது 'இம்பீச்மெண்ட்' (பதவி நீக்க தீர்மானம்) கொண்டு வருவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

எனவே அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்தப் பணம், அவர் ஊழல் செய்து சேர்த்த பணம் என்ற புகார் எழுந்துள்ளது.

எருமை மாடு விற்ற பணமா?

ஆனால் அதிபர் சிரில் ரமபோசா இதை மறுத்துள்ளார். அவர், "இந்தப் பணம் நான் ஊழல் செய்து சம்பாதித்தது அல்ல, நான் எருமை மாடுகளை விற்று வந்த பணம் இது. இந்தப் பணத்தை பண்ணை வீட்டில் சோபா மெத்தைகளுக்கு அடியில் வைத்திருந்தபோது, அதுதான் திருட்டு போய் விட்டது. நான் திருடர்கள் மீது புகார் கொடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சிரில் ரமபோசா தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநாடு விரைவில் தீர்மானிக்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story