வட கொரியா மீண்டும் 3 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென் கொரிய அதிபர் குற்றச்சாட்டு


வட கொரியா மீண்டும் 3 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென் கொரிய அதிபர் குற்றச்சாட்டு
x

வட கொரியாவின் செயல்களை சகித்துக் கொள்ள முடியாது என தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சியோல்,

வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் நிலையில், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா சோதனை செய்தது.

இந்த நிலையில் பெயர் குறிப்பிடப்படாத 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடலில் வட கொரியா சோதனை செய்ததாக தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், வட கொரியாவின் செயல்களை சகித்துக் கொள்ள முடியாது எனவும், இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வட கொரியா உணர வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



Next Story