நடுக்கடலில் அகதிகள் சென்ற படகில் பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக குடியுரிமை வழங்கியது ஸ்பெயின்!


நடுக்கடலில் அகதிகள் சென்ற படகில் பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக குடியுரிமை வழங்கியது ஸ்பெயின்!
x

ஸ்பெயின் நாட்டின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, அந்நாட்டின் குடியுரிமையை பெறும் முதல் குழந்தை இதுவாகும்.

மேட்ரிட்,

ஸ்பெயின் நாட்டிற்குள் அகதிகளாக படகில் பயணித்து நுழைந்தபோது, அந்த படகில் வைத்து பிறந்த பெண் குழந்தைக்கு ஸ்பெயின் அரசு அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது.

ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற சம்பந்தப்பட்ட நபர் அந்நாட்டில் பிறந்ததோடு மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோரும் 10 ஆண்டுகள் அங்கு சட்டப்பூர்வமாக குடியேறியிருக்க வேண்டும். ஸ்பெயினைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நபரை மணம் முடித்திருக்க வேண்டும்.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, அந்நாட்டின் குடியுரிமையை பெறும் முதல் குழந்தை இதுவாகும்.

இந்த குழந்தையின் தாயார் கர்பிணியாக இருக்கும்போது, 2018ஆம் ஆண்டு மே மாதம் கேமரூன் நாட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு படகில் வந்துள்ளார். அப்போது படகிலேயே இவருக்கு இந்த பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் ஸ்பெயின் நாட்டில் அடைக்கலம் புகுந்த நிலையில், நாடற்ற அந்த குழந்தைக்கான குடியுரிமை பெற குழந்தையின் தாய் கோர்ட்டை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இந்த குழந்தையின் அடிப்படை உரிமைகளான கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை அதன் குடியுரிமையை காரணம் காட்டி பாதித்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு படகில் பிறந்த இந்த குழந்தைக்கு, முதல் முறையாக ஸ்பெயின் நாட்டின் குடியுரிமையை வழங்குகிறோம் என கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு நவம்பர் 2021 இல் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட கோர்ட்டு தீர்ப்பை உறுதிப்படுத்துகிறது. அப்போது இந்த தீர்ப்பை எதிர்த்து, ஸ்பெயின் அரசாங்கம் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளை, இந்த தீர்ப்பை ஸ்பெயினின் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யலாம்.

ஸ்பெயினில் பிறந்தால் மட்டுமே ஸ்பானிஷ் குடியுரிமையை பெறுவதற்குப் போதாது. வெளிநாட்டு குழந்தைகள் கூட ஸ்பானிஷ் குடியுரிமையை பெற, அவர்கள் சட்டப்பூர்வமாக அந்நாட்டில் ஒரு ஆண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்பது சட்டம்.

ஸ்பெயினின் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு 40,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடல் வழியாக ஸ்பெயினுக்கு வந்துள்ளனர் ன்பது குறிப்பிடத்தக்கது.


Next Story