சிங்கப்பூர்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக சபாநாயகர்- பெண் எம்.பி. ராஜினாமா ...!

டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக சபாநாயகர்- பெண் எம்.பி. ராஜினாமா ...!
Published on

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் கள்ளக்காதல் விவகாரம்  தொடர்பாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) திங்கள்கிழமை நேற்று அறிவித்தது.

சபாநாயகர் டான் சுவான் ஜின் (54) மற்றும் செங்லி ஹுய்(47) எம்.பி. ஆகியோரின் ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார்.

சபாநாயகர் டானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   செங்லிக்கு திருமணமாகவில்லை.

இவர்கள் ராஜினாமா தொடர்பாக பிரதமர் பிரதமர் லீ சியென் லூங் கூறும்போது,

மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் தகாத உறவில் இருந்தனர். அதை கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது தொடர்ந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன்.ஆனால் அது தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் என்றார்.

டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com