காதலியின் நாயை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அரசியல்வாதி மீது புகார்...!


காதலியின் நாயை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அரசியல்வாதி மீது புகார்...!
x
தினத்தந்தி 27 Dec 2022 8:25 AM GMT (Updated: 27 Dec 2022 8:33 AM GMT)

நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆஷு மாரசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

கொழும்பு

இலங்கை முன்னாள் எம்.பி ஆஷு மாரசிங்க, இவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக இருந்தார்.

இவர் அவரது காதலியின் செல்ல நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தியுள்ளார்.

ஆஷு மாரசிங்க தனது முன்னாள் காதலியின் நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கடந்த 23ம் தேதி ஆஷு மாரசிங்கவின் முன்னாள் காதலி ஆதர்ஷா கரந்தனா கூறி இருந்தார்.

ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆஷு மாரசிங்காவின் காதலி ஆதர்ஷா கரந்தனா ஆகிய இருவரும் இந்த குற்றச்சாட்டுகளை வெளியிட்டு உள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் அவர்கள் பதவியில் இருந்து விலகினர்.

ஆஷூ மாரசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும், நிராகரித்து உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமசந்திர, புலனாய்வு அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் நாய்க்குட்டிக்கு பதிலாக ஒரு வயதேயான சிறுமியோ அல்லது சிறுவனோ இருந்திருந்தால், அவர்களாலும் பேசியிருக்க முடியாது. அந்த குழந்தைகளுக்கு தெரியாதல்லவா?

இந்த நாய் குட்டிக்கும் ஒரு வயது. ஒரு வயதான குழந்தையாக இருந்திருந்தால், இந்த நபர் செய்ததை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் யாரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இதிலுள்ள விஷயத்தை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அவர் சாதாரண நபர் கிடையாது. ஜனாதிபதியின் ஆலோசகர். இந்த நபருக்கு தூதுவர் பதவி வழங்கி வெளிநாட்டிற்கு அனுப்ப ஜனாதிபதி முயற்சிக்கின்றாராம் என கூறினார்.


Next Story