ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
Published on

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோன்ஷி அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடலோர பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com