ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; போலீஸ் தலைமை அதிகாரி பலி


ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; போலீஸ் தலைமை அதிகாரி பலி
x

கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி போலீஸ் தலைமை அதிகாரி ஒருவர் பலியானார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள படாஸ்கான் மாகாணத்தின் தலைநகர் பைசாபாத்தில் மாகாண போலீஸ் தலைமையகம் அமைந்துள்ளது.

இங்கு நேற்று காலை வழக்கம் போல் மாகாண போலீஸ் தலைமை அதிகாரி காரில் வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் அவரது காரை குறிவைத்து வெடி குண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். அவரது உதவியாளர்களான 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

1 More update

Next Story