தான்சானியா: பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்து


தான்சானியா: பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்து
x
தினத்தந்தி 6 Nov 2022 10:57 AM GMT (Updated: 6 Nov 2022 12:28 PM GMT)

தான்சானியாவில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நைரோபி,

தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தானது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் 100 மீட்டர் உயரத்தில் நடுவானில் சென்ற போது மோசமான வானிலை நிலவியது. மேலும் மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தண்ணீரில் மூழ்கியது.விமானத்தில் பயணிகள் 26 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story