இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது

இந்தியர்களுக்கு எதிராக இனவெறுப்பில் பேசிய குற்றத்திற்காக அமெரிக்கா பெண் கைது செய்யப்பட்டார்.
இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது
Published on

வாஷிங்டன்

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மெக்சிகன்-அமெரிக்க எஸ்மரால்டா அப்டன் என்ற பெண் வாகன் நிறுத்துமிடம் ஒன்றில் இந்திய வம்சாவளி பெண்களை பார்த்து அவதூறாக பேசி உள்ளார். இந்திய பெண்களிடம் நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், நீங்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை என கூறி உள்ளார்.

மேலும் இந்தியர்களை நான் வெறுக்கிறேன் என்று கூறினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் டெக்சாஸ் சட்டங்களின்படி ஒரு வெறுப்பு குற்றமாகும்" என்று சம்பவம் குறித்து டெக்சாஸ் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com