காதலர் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த கர்ப்பிணி பெண்

தோழி உள்பட மொத்தம் 13 பேரை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காதலர் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த கர்ப்பிணி பெண்
Published on

பாங்காக்

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சராரத் ரங்சிவுதாபான் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உயிரிழந்த தோழி உள்பட மொத்தம் 13 பேரை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட 13 பேரில் அவரது காதலனும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்த் கொலைகள் நடந்து உள்ளன.அவரது நண்பரான சிரிபோர்ன் கான்வாங்கின் மரணத்தைத் தொடர்ந்து அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

கொலைகளுக்கான காரண பணம் தான் என்று போலீசார் நம்புகிறார்கள், ஆனால் நான்கு மாத கர்ப்பிணியான சரரத் - முன்பு மனநல பிரச்சினைகளால் பாதிக்கபட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com