நேபாள விமான விபத்துக்கு என்ஜின் கோளாறே காரணம் என விசாரணையில் தகவல்


நேபாள விமான விபத்துக்கு என்ஜின் கோளாறே காரணம் என விசாரணையில் தகவல்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:34 PM IST (Updated: 7 Feb 2023 12:42 PM IST)
t-max-icont-min-icon

நேபாள விமான விபத்துக்கு என்ஜின் கோளாறே காரணம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதமாண்டு,

நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் விமான விபத்துக்கு விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியின் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story