உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 61.39 கோடியை தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63.49 கோடியாக உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 61.39 கோடியை தாண்டியது.
Published on

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,591,728 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 634,933,369 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 613,953,155 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com