உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56.27 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56.27 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்,
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59.08 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56.27 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 58,223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .ஒரே நாளில் தொற்று பாதிப்பால் 342 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story






