உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.52 கோடியாக உயர்வு


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.52 கோடியாக உயர்வு
x

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.23 கோடியாக அதிகரித்துள்ளது.



வாஷிங்டன்,


சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், டெல்டா, ஒமைக்ரான் என உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 65 கோடியே 52 லட்சத்து 72 ஆயிரத்து 283 பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்து 18 ஆயிரத்து 572 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story