ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற டென்மார்க் ராணிக்கு கொரோனா பாதிப்பு

Image Courtesy : AFP
டென்மார்க் ராணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது
கோபன்ஹேகன்,
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு கடந்த 19-ந் தேதி லண்டனில் நடந்தது. இதில் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெட் (வயது 82) நேரில் கலந்து கொண்டு, ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது. 50 ஆண்டு காலம் ராணியாக உள்ள அவர் நேற்று முன்தினம் இரவு முதல் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். ஏற்கனவே அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கி மீண்டு வந்தார். அவர் 3 'டோஸ்' தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ள நிலையில் இப்போது கொரோனா தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story