அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி 'பேஸ்புக்' - டிரம்ப் விமர்சனம்


அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி பேஸ்புக் - டிரம்ப் விமர்சனம்
x

சீனாவின் ‘டிக்டாக்’ செயலியை தடை செய்தால் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் வர்த்தகம் இருமடங்காக உயரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் அமெரிக்கர்களின் தரவுகளை வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் வெளிநாட்டு எதிரிகளால் கட்டுப்படுத்தப்படும் செயலிகளுக்கான தடைச் சட்டம் ஆகியவற்றின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு 50-0 என்ற கணக்கில் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதையடுத்து அமெரிக்க அரசின் அனைத்து சாதனங்களிலும் சீனாவின் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் 'டிக்டாக்' செயலியுடன் 'பேஸ்புக்' நிறுவனத்தை ஒப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "டிக்டாக் செயலியை தடை செய்தால் 'பேஸ்புக்' மற்றும் மார்க் சக்கர்பெர்க்கின் வர்த்தகம் இருமடங்காக உயர்ந்துவிடும். கடந்த தேர்தலில் 'பேஸ்புக்' நிறுவனம் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டது. அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி 'பேஸ்புக்' நிறுவனம்தான்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story