விரும்பும் இடத்திலிருந்து பணிபுரியலாம், குறைந்தபட்ச ஊதியம் ரூ.64 லட்சம்- ஊழியர்களை மகிழ்விக்கும் சிஇஓ


விரும்பும் இடத்திலிருந்து பணிபுரியலாம், குறைந்தபட்ச ஊதியம் ரூ.64 லட்சம்- ஊழியர்களை மகிழ்விக்கும் சிஇஓ
x

Image Courtesy: AFP/ @DanPriceSeattle

வீட்டில் இருந்து பணிபுரிவது, ஊழியர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பணிபுரிவது போன்ற பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் கிராவிட்டி பேமண்ட்ஸ். இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ். இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் டான் பிரின்ஸ் தற்போது வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 63 லட்சமாகும்.

மேலும் இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை மற்றும் பல சலுகைகளை வழங்குகிறது. பணியாளர்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் இருந்து வேலை அனுமதிப்பது, மேலும், வீட்டில் இருந்து பணிபுரிவது, ஊழியர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பணிபுரிவது போன்ற பல சலுகைகளை டான் பிரின்ஸ் தனது ஊழியர்களுக்கு வழங்கி உள்ளார்.

1 More update

Next Story