இத்தாலியில் கனமழை, வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு.!


இத்தாலியில் கனமழை, வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு.!
x

இத்தாலியில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

ரோம்.

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியான எமிலியா ரோமக்னாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மேலும் இந்த கனமழை காரணமாக அங்கு ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. கனமழை, வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனினும் இந்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமானதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story