கொலம்பியாவில் திடீர் நிலச்சரிவு: 27 பேர் பலியான சோகம்..!

நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 27 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.
கொலம்பியாவில் திடீர் நிலச்சரிவு: 27 பேர் பலியான சோகம்..!
Published on

பகோடா,

தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், நதிகளின் ஓரம் உள்ள பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 27 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com