அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 17 சீக்கியர்களில் 2 பேர் மீது இந்தியாவில் கொலை வழக்கு..!!


அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 17 சீக்கியர்களில் 2 பேர் மீது இந்தியாவில் கொலை வழக்கு..!!
x

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 17 சீக்கியர்களில் 2 பேர் மீது இந்தியாவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராக்களில், கடந்த மாதம் மற்றும் கடந்த 2022-ம் ஆண்டில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், வடக்கு கலிபோர்னியாவின் பல பகுதிகளில் போலீசார் சமீபத்தில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பயங்கர ஆயுதங்களுடன் 17 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 குழுக்களாக இயங்கி வந்ததும், அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வந்ததும் தெரியந்தது.

தற்போதும் அதைப்போன்ற மோதலுக்கு தயாரானபோதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 பேரில் 2 பேர் மீது இந்தியாவில் ெகாலை வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் 2 பேர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்தியாவால் தேடப்படுபவர்கள் என்றும் கண்டறியப்பட்டு உள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story