ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க இங்கிலாந்து ஆதரவு!


ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க இங்கிலாந்து ஆதரவு!
x

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

நியூயார்க்,

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான இங்கிலாந்து தூதர் பார்பரா உட்வார்ட் கூறுகையில், இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அந்த நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்து மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று உட்வார்ட் கூறினார்.


Next Story