இங்கிலாந்து நிதித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் ராஜினாமா...!


இங்கிலாந்து நிதித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் ராஜினாமா...!
x

இங்கிலாந்தின் நிதி மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, கிறிஸ் கடந்த புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், கிறிஸ் மீது போரிஸ் ஜான்சன் அரசு சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை என கூறி அமைச்சரவையில் இருந்து நிதி மற்றும் சுகாதாரத்துறை மந்திரிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவம் இங்கிலாந்து அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story