இங்கிலாந்து உள்துறை மந்திரியின் தந்தை நிலம் கோவாவில் அபகரிப்பு

கோவாவில் உள்ள தனது பூா்வீக சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சரின் தந்தை புகார் அளித்துள்ளார்.
பானஜி,
கோவாவில் உள்ள தனது பூா்வீக சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சிறப்புக் குழு அமைத்து விசாரித்து வருகின்றனர். இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ், உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சூவெல்லா பிரேவா்மனை நியமித்தார்.
இந்த நிலையில், சூவெல்லாவின் தந்தை கிரிஸ்டி பொ்னாண்டஸ், கோவா அஸ்ஸாகோவில் 13,990 சதுர அடி கொண்ட இரண்டு பூா்வீக இடங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக கோவா அரசிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிறப்புக் குழு அமைத்து கோவா போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






