கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரல் புகைப்படம்...!


கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரல் புகைப்படம்...!
x
தினத்தந்தி 1 March 2023 6:56 AM GMT (Updated: 1 March 2023 6:59 AM GMT)

12 மணி நேரத்தில் மொத்தம் 4 ஆயிரம் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

லண்டன்,

கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கேமராவில் புகைப்படமாக எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் (வயது 41). இவர் கொரோனா ஊரங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்ததில் இருந்து வெளிவர புகைப்பட கலைஞராக மாறினார். பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை நிகழ்வுகளை புகப்படங்களாக எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், இயன் ஸ்பரொட் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் சதர்லாந்து பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றார். அங்கு பல்வேறு புகைப்படங்களை எடுத்தார். மொத்தம் 12 மணி நேரம் அப்பகுதியில் புகைப்படம் எடுத்துள்ளார். தான் எடுத்த புகைப்படங்களை பார்த்தபோது இயனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

இயன் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில் கடல் அலை கலங்கரை விளக்கத்தில் மோதி அது மனித முகம் போன்ற உருவத்தில் பொங்கி எழுந்திப்பதை கண்டு இயன் அதிர்ச்சியடைந்தார். கலங்கரை விளக்கத்தில் கடல் அலை மோதி மனித முகம் போன்ற அமைப்பில் கடல் அலை சிதறியதை இயன் தனது கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இயன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.




Next Story